காளையார்கோவில்: அழகாபுரியில் இடப்பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் ஐந்து பேர் மீது வழக்கு
காளையார்கோவில் அருகே அழகாபுரியை சேர்ந்த பிரான்சிஸ், இவரது உடன் பிறந்தவர்கள் தனசேகரன்,அருள்அம்மாள் ஆவார்கள். வீட்டு இட பிரச்சனை சம்பந்தமாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் ஒருவரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருதரப்பினரும் காளையார்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.