திண்டுக்கல்லில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த அடிதடி வழக்கில் ரவுண்ட்ரோடு, புதூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து ஜெயக்குமார் நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் திண்டுக்கல் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினர்