காளையார்கோவில்: கீரனூர் சந்திப்பு அருகே கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயம்- போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் ராகினிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் அவரது இரு சக்கர வாகனத்தில் மதுரை-தொண்டி ரோட்டில் கீரனூர் சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் அவரது காரை அதிவேகமாக ஓட்டி வந்து சுரேஷ்குமாரின் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தினார்,இதில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்,இது குறித்து காளையார் கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.