சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் மேம்பாலத்தில் நேற்று இரவு சோயல் மற்றும் சுகைல் ஆகியோர் இருச்சக்கர வாகனத்தில் பைக்ரேஸில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, எதிர்திசையில் குமரன் என்பவர் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அவர் மீது மோதியதில், சுகைல் மற்றும் குமரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சோயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இது குறித்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.