மதுரை கிழக்கு: மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில்: களைகட்டிய குதிரை வாகன புறப்பாடு!
மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவில் புரட்டாசி மாத பெருவிழாவின் 8-ம் நாளான இன்று குதிரை வாகன புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.