நாட்றாம்பள்ளி: பாறையூர் பகுதியில் சுடுகாடு கேட்டு வட்டாட்சியரின் வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்களால் பரபரப்பு
நாட்றம்பள்ளி பாறையூர் பகுதியில் 15 சென்ட் அளவிலான நீர்நிலை புறம்போக்கு இடத்தை சுடுகாடாக பயன்படுத்துவது தொடர்பான பேச்சு வார்த்தையின் போது வட்டாட்சியர் கண்டு கொள்ளாததால் ஆதிரமடைந்த பொது மக்கள் வட்டாட்சியரின் வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்ததனர். அதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வட்டாட்சியர் உறுதியளித்தின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.