தண்டையார்பேட்டை: ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் விபத்தில் உயிரிழந்த உடல்களை பார்வையிட்ட அமைச்சர் சிவசங்கரன்
ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் எண்ணூர் பெல் நிறுவனத்தில் மின் உற்பத்தி நிலைய கட்டுமான விபத்தில் உயிரிழந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 9 பேரின் உடல்களை பார்வையிட்ட வந்த மின்சார துறை அமைச்சர் சிவசங்கரன் உடற்கூறு ஆய்விற்குப் பிறகு 9 பேரில் உடல்களும் விமானம் மூலம் அசாம் எடுத்துச் செல்ல இருப்பதாக கூறினார். மேலும் முதலமைச்சர் இவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கி இருப்பதாகவும் கூறினார் அனல் மின் நிலையம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்