பழனியில் திருவள்ளுவர் அரசு உதவிபெறு நடுநிலைப் பள்ளி கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1965 ஆம் ஆண்டு முதல் 1973 ஆம் ஆண்டு வரை ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்ற முன்னாள் மாணவ மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 60 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவ மாணவியரும் இந்நாள் தாத்தா பாட்டிகளும் தங்களின் பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.