தருமபுரி: 115 பேருந்துகளில் 'வெற்றிப் பயணம்' திட்டம் தொடக்கம்!
தருமபுரியில் மகளிருக்கான 'வெற்றிப் பயணம்' திட்டத்தை மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தொடங்கி வைத்தார். 115 பேருந்துகளில் நடைமுறைக்கு வந்துள்ள இந்த திட்டத்தால் பெண்கள், திருநங்கைகள் மற்றும் குழந்தைகள் பயன் பெறுவார்கள். பயணச் செலவை குறைக்கும் இந்த முயற்சியில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.