வாணியம்பாடி: கோட்டை பகுதியில் தரைப்பாலத்தை தற்காலிகமாக சீரமைத்து போக்குவரத்து தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
வாணியம்பாடி கோட்டை பகுதியில் கோட்டை பகுதியையும் பெரிய பேட்டை பகுதியையும் இணைக்கும் தரைப்பாலம் கடந்த 18ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக சேதம் அடைந்த நிலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைத்து போக்குவரத்து இன்று பிற்பகல் தொடங்கியது. இதனால் பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.