வேடசந்தூர்: அய்யலூரில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஆடு ரூபாய் 10 ஆயிரத்திற்கு விற்பனை
திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. இந்த நிலையில் நாளை வியாழக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று அய்யலூரில் சிறப்பு ஆட்டுச்சந்தை கூடியது. ஆனால் விவசாயிகள் அதிக அளவில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வராததால் சந்தை களை இழந்து காணப்பட்டது.