தருமபுரி: பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை!
பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 59 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊழியர் ஒருவரின் ஜி-பே கணக்கில் இருந்த 1.33 லட்சம் ரூபாய் ஆன்லைன் பரிவர்த்தனை குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.