திருப்பூர் வடக்கு: பாண்டியன் நகரில், அதிமுக நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து, முன்னாள் முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தை எம்எல்ஏக்கள் இன்று பார்வையிட்டனர்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து, பாண்டியன் நகரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் கூட்டம் வரும் பத்தாம் தேதி அன்று நடைபெற உள்ளது இந்நிலையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் நடக்கும் ஏற்பாட்டுப் பணிகளை எம்எல்ஏ க்கள்., செங்கோட்டையன், எம்.எஸ் எம் ஆனந்தன், விஜயகுமார் உள்ளிட்டோர் இன்று பார்வையிட்டனர்.