கோவில்பட்டி: கோவில்பட்டி வழியாக மைசூருக்கு தசரா மற்றும் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில் தெற்கு ரயில்வே அறிவிப்பு
கோவில்பட்டி வழியாக மைசூர் - நெல்லை இடையே சிறப்பு ரயில் (06239) வருகிற 15ம் தேதி முதல் நவம்பர் 24 வரை திங்கட்கிழமை தோறும் மைசூரில் இருந்து இரவு 8.15 க்கு புறப்படும். மறு மார்க்கத்தில் நெல்லை மைசூர் சிறப்பு ரயில் (06240) செவ்வாய்க்கிழமை மாலை 3. 40 மணிக்கு புறப்படும். தசரா மற்றும் தீபாவளியை முன்னிட்டு இயக்கப்படும் இந்த ரயிலுக்கு முன்பதிவு நடக்கிறது. தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.