தருமபுரி: தொப்பையார் அணையில் மீன்பிடிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம் தொப்பையார் அணையில் மீன்பிடிக்கச் சென்ற ரஞ்சித் (25) என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.