திருப்பத்தூர்: தூய நெஞ்சக் கல்லூரி அருகே கல்லூரி மாணவர்களை ஏற்றிக்கொண்டு ராங் ரூட்டில் சென்ற சொகுசு பேருந்து-ஷேர் ஆட்டோ மீது மோதியதில் ஓட்டுநர் உயிரிழப்பு.
ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் தினசரி மார்க்கெட்டிற்கு காய்கறிகளை ஆட்டோவில் ஏற்றி வந்தபோது தனியார் கல்லூரியிலிருந்து 3ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளை சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அழைத்து செல்வதற்காக அந்த பேருந்து சென்றபோது தூய நெஞ்சக் கல்லூரி அருகே ராங் ரூட்டில் சென்றதால் அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியதில் அப்பளம் போல் ஷேர் ஆட்டோ நொறுங்கியது இதனால் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.