ஸ்ரீபெரும்புதூர்: வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில்கார்த்திகை மாத கடைசி செவ்வாயினை முன்னிட்டு சிறப்பு பூஜை
கார்த்திகை மாத கடைசி செவ்வாய்கிழமையினை முன்னிட்டு இத்திருக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். காலையில் மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சுப்பிரமணிய சுவாமி ரோஜா மாலை அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு செண்பக மாலை, சாமந்தி மாலை, ரோஜா மாலைகள் அணிந்து காட்சியளித்தார். திருமண வரம்வ