கோவில்பட்டி: பூசாரிபட்டி பகுதியில் காவலர்களை அறிவாளால் மிரட்டிய இருவரில் ஒருவர் கைது
கோவில்பட்டி அருகே பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த இருதயராஜ் மற்றும் முகில்ராஜ் ஆகியோர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உதவி ஆய்வாளர் செந்தில்வேல் தலைமையிலான போலீசாரை அவதூறாக பேசி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனைத்தொடர்ந்து இருதயராஜை போலீசார் கைது செய்தனர். மற்றொரு நபரான முகில் ராஜை கிழக்கு காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.