தமிழ் கடவுள் முருகபெருமானின் 3ம் - படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் பேருந்து நிலையம், அடிவாரம், கிரிவீதி, ரோப்கார் நிலையம், ரெயில் மின் இழுவை நிலையம், யானைப்பாதை, படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதியது.