திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது யாகப்பன்பட்டி மெயின் ரோடு பகுதியில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த சிறுமலை, தென்மலை, ஊரடியை சேர்ந்த திருச்சபைராஜா(41) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 12 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.