திருப்பத்தூர்: சின்னமதார் தெருவில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் - கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சின்னமதார் தெருவில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று "உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் சிவ செளந்திரவல்லி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.