நிலக்கோட்டை: வத்தலகுண்டு: காட்டுப்பன்றி வலையில் சிக்கிய கரடி; ஒருவர் கைது
வத்தலகுண்டு அருகே காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கிய கரடியை மீட்ட வனத்துறையினர், இது தொடர்பாக பெரியசாமி என்பவரை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து வேட்டையாட பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் காட்டுப்பன்றி எலும்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.