நாகப்பட்டினம்: மாவட்டத்தில் நடைபெற்று வரும் குறுவை அறுவடை பணிகள் மற்றும் கொள்முதல் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் விளக்கம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும்  28.10.2025 அன்று வரை 86,924 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.           நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் சுமார் 30,217.34 ஹெக்டர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, 28.10.2025 வரை சுமார் 23,701 ஹெக்டர் பரப்பளவில் குறுவை சாகுபடி அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 6,516 ஹெக்டர் அறுவடைப்பணி மற்றும் நெல் கொள்முதல்