வேப்பூர்: நல்லூர் நகர், சேப்பாக்கம், வேப்பூர் பகுதிகளில் DSP மோகன் தலைமையில் மத்திய காவல் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மத்திய காவல் பாதுகாப்பு படையினர் திட்டக்குடி டி.எஸ்.பி. மோகன் தலைமையில் வேப்பூர் தாலுகா கண்டபங்குறிச்சி, நல்லூர் நகர், சேப்பாக்கம் மற்றும் வேப்பூர் கூட்டுரோடு பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்நிகழ்வின் போது உள்ளூர் போலீசார் உடனிருந்தனர். மக்கள் அச்சமின்றி 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது.