பெரம்பலூர்: தந்தை பெரியார் பிறந்தநாளில் சமூகநீதி சமத்துவ நடைபயணம்
பெரம்பலூரில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழகம் சார்பில் சமூகநீதி சமத்துவ நடைபயணம் நடைபெற்றது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், பல்வேறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று திமுக அலுவலகத்தில் நிறைவடைந்தது.