திருக்கோயிலூர்: சந்தப்பேட்டையில் தண்ணீர் பாட்டில் மொத்த விற்பனையகத்தில் வாங்கிய தண்ணீர் பாட்டிலில் இருந்த தூசியால் மக்கள் அதிர்ச்சி
சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள குடிநீர் பாட்டில் மொத்த விற்பனை கடை ஒன்றில் விழுப்புரத்தை சேர்ந்த திருமால் முருகன் என்பவர் 20 ரூபாய் கொடுத்து இரண்டு லிட்டர் தண்ணீர் கேன் ஒன்றை வாங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து பாதி தண்ணீரை குடித்து விட்டு பார்த்தபோது தண்ணீர் பாட்டிலில் உப்பு துகள்கள் போன்று அதிக அளவில் தூசியிருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.