திண்டுக்கல் மாவட்டம் பழனி தெரசம்மாள் காலனி பகுதியை சேர்ந்த தோமையார்(எ) சின்னத்தம்பி என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் சூர்யாஆப்ரஹாம்(20) சிவா (எ) ஆரோக்கிய ரோஸி(29), சிவசங்கர்(20), விஜய் ஆதித்யா(20), மேயர்முத்து(31) ஆகிய 5 பேரை பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களின் குற்றசம்பவங்களை அடக்கும் பொருட்டு ஐந்து பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது.