பொங்கல் பண்டிகை நாளை நடைபெறுவதை ஒட்டி வேடசந்தூர் கடை வீதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். ஜவுளி கடைகள், கோல பொடி கடைகள், செப்பல் கடைகள், பேன்சி ஸ்டோர், மளிகை கடைகளில் ஏராளமானோர் குவிந்தனர். தமிழர்கள் மட்டுமே கொண்டாடும் பொங்கல் பண்டிகையை வேடசந்தூர் சுற்று பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்களும் கொண்டாடுவதற்காக தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க குவிந்தனர்.