காளையார்கோவில்: பணக்கரை ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் திருக்கோவிலில் மாசி பாரி வேட்டை உற்சவ விழா
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பணக்கரை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் திருக்கோவிலில் மாசி பாரி வேட்டை உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கரும்புத்தொட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு, கும்மியடித்தல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தார். பின் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற கருப்பசாமிக்கு பூஜை செய்த எலுமிச்சை பழம், பூ மாலைகளை ₹10 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தனர்.