செங்கம்: செங்கத்தில் பயன்பாடின்றி வீணாகும் 44 டிராக்டர்கள்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்தில் உள்ள 44 ஊராட்சிகளில் குப்பை அகற்ற வழங்கப்பட்ட டிராக்டர்கள் மற்றும் டிராலிகள் பல மாதங்களாகப் பயன்பாடின்றி வீணாகி வருகின்றன. இவற்றை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.