சாத்தான்குளம்: சங்கரன்குடியிருப்பு புனித தெரசம்மாள் ஆலய திருவிழா சிறப்பு திருப்பலி
சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு பங்கிற்குட்பட்ட புனித தெரசம்மாள் ஆலய திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து நடந்த சிறப்பு ஆராதனையில் திரளான இறை மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இந்த திருவிழாவில் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.