கோவை வடக்கு: கோவையில் தளபதி இரத்ததான இயக்கம் சார்பில் 51-வது மாபெரும் இரத்ததான முகாம்!
கோவை வரதராஜபுரத்தில் தளபதி இரத்ததான இயக்கம் சார்பில் 51-வது மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ள இந்த இயக்கத்தின் முகாமை, கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் துவக்கி வைத்தார்.