ஓசூர்: தாசேப்பள்ளி பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பைகளை பையோ மைனிங் முறையில் அகற்றும் பணியை துவக்கி வைத்த மாநகர மேயர்
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு கொட்டப்பட்டிருந்த குப்பைகளை அகற்றுவதற்கு இன்று (22.09.2025) காலை 11.00 மணியளவில் தூய்மை பாரத திட்டம் 2024-25ன் கீழ் தாசேப்பள்ளி உரக்கிடங்கில் உள்ள 41400MT குப்பைகளை ரூ.3.19 கோடி மதிப்பீட்டில் Bio Mining முறையில் பிரித்தெடுத்தல் பணியினை வணக்கத்திற்குரிய மேயர் S.A.சத்யா அவர்களும் மாநகராட்சி ஆணையாளர் அவர்களும் துவக்கி வைத்தனர். இப்பணி 9 மாத காலத்திற்குள் முடிவடைந்த பின்னர் இப்பகுதியில் மரங்கள் வைத்து பராமரிப்பு பணிகள் செய்யப்படும்.