பழனி: பழனியில் கஞ்சா விற்பனை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 2 பேர் கைது
பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது திண்டுக்கல் ரோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பழனியை சேர்ந்த தெளஃபிக், சதாம் உசேன் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த 2 பேர் மீதும் கஞ்சா வழக்குகள், அடிதடி வழக்குகள் என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது