பெரம்பலூர்: பெரம்பலூரில் பரபரப்பு: ஒப்பந்ததாரர் வீடு மற்றும் கார் மீது தாக்குதல் நடத்திய திமுக பிரமுகர்
பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் அருகே தொழில் போட்டி காரணமாக, திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர் கூலிப்படையை வைத்து ஒப்பந்ததாரர் சுந்தரராஜனின் வீடு மற்றும் காரை சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட எஸ்பியிடம் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ளனர்.