திருப்பத்தூர்: ராவுத்தம்பட்டி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்- தாசில்தார் பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ஆதியூர் ஊராட்சி ராவுத்தம்பட்டி பகுதியில் தமிழக முதல்வரின் முகவரி துறை சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் இன்று தாசில்தார் நவநீதம் தலைமையில் நடைபெற்றது. இதில் கந்திலி ஒன்றிய சேர்மன் திருமதி திருமுருகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சாதி சான்றிதழ், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.