திருப்பத்தூர்: ஆட்சியர் அலுவலகத்தில் அன்பு கரங்கள் திட்டம் துவக்க விழா - கலெக்டர் எம்எல்ஏக்கள் பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் அன்பு கரங்கள் திட்டம் துவக்க விழா மாவட்ட கலெக்டர் சிவ செளந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது. இந்த திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சியின் வாயிலாக துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.