திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி முதல் பழவேற்காடு வரை கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது மணிக்கு 50 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது
திருவள்ளூர் மாவட்டம் டிட்வா புயல் எதிரொலியாக காட்டுப்பள்ளி முதல் பழவேற்காடு வரை கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.மணிக்கு 50 முதல் 55 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசுவதால் மீனவர்கள் தங்களது மீன்பிடி படகுகளையும், மீன்பிடி கலன்களையும் கரையில் பாதுகாத்து வருகின்றனர்.மேலும்,3 கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.