எட்டயபுரம்: ஆட்டுச் சந்தையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் ஆட்டு சந்தை புகழ்பெற்றது இந்த ஆட்டு சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு வளர்க்கும் தொழிலாளர்கள் எட்டையாபுரம் விளாத்திகுளம் கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தங்கள் வளர்த்த ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர் இந்த ஆடுகளை வாங்குவதற்காக தென் மாவட்டங்கள் முழுவதிலும் இருந்து ஆட்டு வியாபாரிகள் ஆர்வமுடன் ஆடுகளை வாங்கிச் சென்றனர் ஒரு கிலோ 1000 ரூபாய் வரை ஆடுகள் விற்கப்பட்டது மொத்தமாக சுமார் 6 கோடி ரூபாய் அளவிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது