திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சிவகிரி பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 6 மாதங்களாக சாலை பணிகளுக்காக ஜல்லி கற்கள் கொட்டபட்டு சாலை போடாமல் இருப்பதால் ஜல்லிகற்கள் பெயர்ந்து இருப்பதால் தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரை ஆக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இடும்பன் குளம் பகுதிக்கு புனித நீராட செல்லும் பக்தர்கள் ஜல்லிகள் பெயர்ந்த நிலையில் உள்ள சாலைகளில் நடக்க முடியாமல் அவதியடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தவெகாவினர் துடைப்பத்துடன் வந்து சுத்தம் செய்தனர்.