பெரியகுளம்: கரூர் திமுக முப்பர் விழாவிற்கு சென்ற வடுகபட்டி 67வயது முதியவர் மாயம் -உறவினர்கள் குடும்பத்தினர் சோகம்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டி ஒன்பதாவது வார்டு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மூக்கன் மகன் அமாவாசி (67) திமுகவில் தீவிர விசுவாசி. கடந்த சில தினங்களுக்கு முன் கரூர் திமுக முப்பெரும் விழாவிற்கு சென்றவர் தற்போது வரை வீடு திரும்பாததால் குடும்பத்தினர், உறவினர்கள் சோகத்தில் உள்ளனர் மேலும் கரூர் தான்தோனி மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.