திருப்பத்தூர்: எனக்கு என் இடம் வேண்டும் இல்லன்னா இங்கேயே தூக்கு மாட்டிக்குவேன்-ஆட்சியர் முன்பு வேட்டியை கழட்டி அறைநிர்வாணமாக நின்ற முதியவரால் பரபரப்பு
பாலூர் பகுதியை சேர்ந்த வில்லியம்ஸ் என்பவருக்கு 1.34 ஏக்கர் நிலம் பூர்வீக சொத்து பிரித்து கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் அதனை அளக்கும் போது16 சென்ட் நிலம் குறைவாக இருப்பதாக கூறி கடந்த பல ஆண்டுகளாக மனு அளித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் வருவாய்த்துறை அலுவலர்கள் இது குறித்து கண்டுகொள்ளாமல் அலட்சியமாக பதில் அளித்து வந்துள்ளனர்.எனவே இதனால் ஆத்திரம் அடைந்த வில்லியம்ஸ் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாளில் மனு அளிக்க வந்தபோது எனக்கு என் நிலம் வேண்டும் இல்லை என்றால் நான் இங்கேயே தூக்கு மாட்டி கொள்வேன் என்று வேட்டியை கழட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.