திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜம்புதுரை கோட்டை, காமலாபுரம், மெட்டூர் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் அம்மைநாயக்கனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜெகநாதபுரத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், வீடுதோறும் சென்று வழங்கினார்.