ஓசூர்: மோடியின் 75வது பிறந்தநாளை 15 நாட்கள் கொண்டாட உள்ளோம் - ரிங்ரோடு சாலை பாஜக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் பேட்டி
ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பிஜேபியின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். செப்டம்பர் 17ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்த நாளை 15 நாட்கள் மக்கள் நலம் சார்ந்த சேவா நிகழ்ச்சிகளாக நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.