திருப்பத்தூர்: ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 367 மனுக்கள் பெறப்பட்டது
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் சிவ செளந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சரின் முதன்மை திட்டமான உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரபெற்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.