மயிலாப்பூர்: சென்னை மெரினா கடற்கரையில் தூய்மை பணியாளர்கள் பணியில் நிரந்தரம் செய்ய கோரி கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்
சென்னை, கடந்த மூன்று மாதங்களாக தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் மண்டபம் & சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.