நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்திலுள்ள எட்டுக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட புறக்கோட்டகம் பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பிலான நன்செய் நிலங்கள் உள்ளன. இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் உள்ள எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான இந்த நிலங்களில், விவசாயிகள் மூன்று தலைமுறைகளாக குத்தகை செலுத்தி சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் பெரும்பான்மையாக ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறா