தென்காசி: 3 மாதங்களாக சம்பளம் இல்லை: ஆசிரியர்கள் திடீர் போராட்டம்!
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜூன் முதல் ஊதியம் கிடைக்காததால் ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.