தருமபுரி: தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் ரூ.10 லட்சத்திற்கு மேல் விற்பனை!
தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் 36 விவசாயிகள் கொண்டு வந்த 1764 கிலோ பட்டுக்கூடுகள் மொத்தம் 10 லட்சத்து 18 ஆயிரத்து 293 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. கிலோவிற்கு அதிகபட்சமாக 745 ரூபாய் விலை கிடைத்தது.