துறையூர்: துறையூர் புளியஞ்சோலை சுற்றுலா தளம் மூடல்: காரணம் என்ன?
நாமக்கல் கொல்லிமலைப் பகுதியில் பெய்த கனமழையால் புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா தளம் மூடப்பட்டது. பாதுகாப்பு கருதி வனத்துறை தடை விதித்துள்ளது. இருப்பினும், இந்த நீர்வரத்தால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.